search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு காய்ச்சல் பாதிப்பு"

    • வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
    • ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகள் தயார்

    வேலூர்:

    வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவிக்கும், வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தைக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, பலவன்சாத்து குப்பம் மற்றும் சலவன்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    சுகாதாரத் துறை குழுவினர் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து கணக்கெடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்ட லங்களிலும் தலா 75 பேர் வீதம் மொத்தம் 300 பேர் கொண்ட குழுவினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    வேலூருக்கு முதல்வர் வருகைதர உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அதேபோல், வேலூர் சுகாதாரத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணிகளும், கொசு மருந்து அடிக்கும் பணியுடன் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் தாமதம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    தொடர் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து டெங்குவை உறுதி செய்ய வேண்டும். டெங்கு பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×